முகப்பு
இந்தியா

தில்லியில் பிளைவுட் கடையில் பயங்கர தீ விபத்து 

புது தில்லி காந்தி நகர் பகுதியில் உள்ள பிளைவுட் கடையில் புதன்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:07 PM
பகிர்:

புது தில்லி: புது தில்லி காந்தி நகர் பகுதியில் உள்ள பிளைவுட் கடையில் புதன்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து குறித்து கடையின் உரிமையாளர் அமந்தீப் கூறுகையில், புது தில்லி காந்தி நகர் பகுதியில் உள்ள எனது பிளைவுட் கடையில் புதன்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட 15 நிமிடங்களுக்குப் பிறகு எனது சகோதரரிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. 

இதையடுத்து தீயணைப்பு நிலையங்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தேன். 

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பதினொரு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர் என்று தெரிவித்தார்.

இந்த தீ விபத்தில் உயிர்சேதம், காயங்கள் ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.

முழு கட்டுரையைப் படிக்க →