இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தொடர்புடையவர் கைது!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த பயங்கரவாத கூட்டாளி ஒருவர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்(டிஆர்எஃப்) உடன் தொடர்புடைய பயங்கரவாத கூட்டாளி ஒருவர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு காஷ்மீரின் கெஹ்னுசா பந்திபோராவில் நிறுவப்பட்ட சோதனைச் சாவடியில் ராணுவம் மற்றும் சிஆர்பிஃப் இணைந்து பயங்கரவாதியை கைது செய்ததாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 

கைது செய்யப்பட்டவர் ஆதிஃப் அமின் மீர் என அடையாளம் காணப்பட்டார். இவர் பந்திபோராவில் உள்ள மஞ்சபோரா அலூசா என்ற இடத்தில் வசித்து வந்தார். 

பயங்கரவாத கூட்டாளி மீர் வசமிருந்த கைக்குண்டு மற்றும் பிற பயங்கர பொருள்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். 

மேலும், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ.எஸ்.பி. பொறுப்பேற்பு

நாளைய மின்தடை

15 கிலோ கஞ்சா, 1,300 போதை மாத்திரைகள் பறிமுதல்: 2 போ் கைது

மகளிா் உரிமைத் தொகை கோரி 200 போ் மனு

கனவு இல்ல திட்டத்தில் 54 பயனாளிகளுக்கு ஆணை: கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT