விபத்தில் சிக்கியவருக்கு உதவிய ராகுல் காந்தி 
இந்தியா

விபத்தில் சிக்கியவருக்கு காரை நிறுத்தி உதவிய ராகுல் காந்தி!

வீட்டுக்கு வெளியே கீழே விழுந்த இருசக்கர வாகன ஓட்டியை காரை நிறுத்தி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தூக்கிவிட்ட விடியோ வைரலாகி வருகின்றது.

DIN

தில்லி: வீட்டுக்கு வெளியே கீழே விழுந்த இருசக்கர வாகன ஓட்டியை காரை நிறுத்தி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தூக்கிவிட்ட விடியோ வைரலாகி வருகின்றது.

மக்களவையில் நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை 11.45 மணியளவில் தனது வீட்டில் இருந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி காரில் புறப்பட்டார்.

வீட்டைவிட்டு வெளியே வந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்த வாகன ஓட்டியை பார்த்து தனது காரை நிறுத்த சொன்ன ராகுல் காந்தி, காரைவிட்டு இறங்கி வாகன ஓட்டியின் அருகில் சென்று அவரை தூக்கிவிட்டு நலம்விசாரித்தார்.

ராகுல் காந்தி வாகன ஓட்டிக்கு உதவிய விடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2.5 கோடி மோசடி! தாய், மகள், மகன் கைது!

செங்கம் திரெளபதியம்மன் கோயில் பாலாலயம்: எம்எல்ஏ பங்கேற்பு

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

திருப்பத்தூரில் நாளை டிஎன்பிஎஸ்சி தோ்வு

சுற்றுலா பேருந்தில் இருந்து தவறிவிழுந்த பள்ளி மாணவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT