இந்தியா

மக்களவையிலிருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு!

DIN

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் மூன்றாவது நாளாக இன்று விவாதம் நடைபெற்று வருகிறது. 

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார். 

மாநிலங்களவை உறுப்பினரான அவர், மக்களவையில் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக எம்.பி.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4 மணிக்குப் பதிலளிக்க உள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT