கோப்புப் படம் 
இந்தியா

வட மாநிலங்களில் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!

வட மாநிலங்களில் அடுத்த 2 நாள்களுக்கு கன முதல் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

DIN

வட மாநிலங்களில் அடுத்த 2 நாள்களுக்கு கன முதல் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், 

இமயமலை, மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் 2 நாள்களுக்கு கன முதல் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

115.6 மி.மீ முதல் 204.4 மி.மீ வரை கனமழை பெய்யு வாய்ப்புள்ளதாகவும். பொதுமக்கள் தயாராக இருக்குமாறு எச்சரித்துள்ளது. 

அதேபோன்று, உத்தரகண்டில் ஆக.12, 15, 16 ஆகிய தேதிகளில் கன முதல் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. 115.6 முதல் 204.4 மி மீ வரை மழை பெய்யலாம். 

உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த இரண்டு நாள்களாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அருணாச்சல பிரதேசம், அசாம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு ஐஎம்டி இன்று வரை ஆரஞ்சு எச்சரிக்கையை வெளியிட்ட நிலையில், அதனை தொடர்ந்து மேலும் 2 நாள்களுக்கு தற்போது எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏற்றத்தில் பங்குச் சந்தை! 350 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஒசூர் வந்தடைந்தார் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின்

குறுஞ்செய்தியை திருடும் செயலி! பதிவிறக்கம் செய்தால் எல்லாம் காலி!

பன்றியின் கல்லீரல் பொருத்தப்பட்டவர் 171 நாள்கள் வாழ்ந்த அதிசயம்!

தேர்தல் ஆணையத்திற்கு ப.சிதம்பரம் 7 கேள்விகள்! அவை என்னென்ன?

SCROLL FOR NEXT