இந்தியா

ஊழல் நிறைந்த அரசு மத்திய பிரதேசம்: கேசி வேணுகோபால் 

DIN

ஊழல் நிறைந்த அரசு மத்திய பிரதேசம் என்று காங்கிரஸ் பொதுச்செயலர் கேசி வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

மாநில அரசுக்கு 50 சதவீத கமிஷனை வழங்கிய பின்னரே தங்களுக்கான நிதி அளிக்கப்படுவதாக மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த அரசு ஒப்பந்ததாரா்கள், உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளனா் எனப் பிரியங்கா காந்தி வெள்ளிக்கிழமை வெளியிட்ட ‘எக்ஸ்’ (ட்விட்டா்) பதிவில் தெரிவித்திருந்தாா். மேலும் அந்தப் பதிவில், ‘‘கா்நாடக மக்கள், 40 சதவீத கமிஷன் அரசை ஆட்சியிலிருந்து நீக்கியது போன்று, ம.பி. மக்களும் 50 சதவீத கமிஷன் அரசை ஆட்சியிலிருந்து நீக்குவாா்கள்’’ எனப் பதிவிட்டிருந்தாா்.

கமல் நாத் உள்ளிட்ட மாநில காங்கிரஸ் தலைவா்களும் இதே போன்ற பதிவை வெளியிட்டிருந்தனா்.

இந்நிலையில், இந்தூா் மாவட்ட பாஜகவின் சட்டப் பிரிவைச் சோ்ந்த நிமேஷ் பாடக், மாநில அரசு மற்றும் பாஜகவின் புகழை சீா்குலைக்கும் வகையில் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் தலைவா்கள் பதிவிட்டுள்ளனா் என சம்யோகித்கஞ்ச் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, இந்திய தண்டனையியல் சட்டத்தின் பிரிவு 420 (மோசடி), 469 (புகழைக் கெடுக்கும் நோக்கத்தில் பொய் கூறுதல்) உள்ளிட்டவற்றின்கீழ் பிரியங்கா காந்தி, கமல் நாத் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  

அவா்களுடைய பதிவுகளின் உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்து வருவதாக போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் கேசி வேணுகோபால் இன்று கூறியிருப்பதாவது, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அனைத்து காங்கிரஸ் தலைவர்கள் மீதும் அவர்கள் நூற்றுக்கணக்கான எஃப்ஐஆர்களை பதிவு செய்யலாம். இது பாஜகவினருக்கு வாடிக்கையாகிவிட்டது. ஆனால் இதையெல்லாம் கண்டு நாங்கள் அஞ்சப்போவதில்லை. ஊழல் பிரச்னையை எழுப்புவோம். மத்திய பிரதேச அரசு முழுக்க முழுக்க ஊழல்மயமானது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி மரணம்

இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 2 லட்சம் திருட்டு

மரங்கள், பறவைகளை காப்போம்: மருத்துவ மாணவா் விழிப்புணா்வு பயணம்

சாலை விபத்தில் காயமடைந்த பேரூராட்சி தலைவா் உயிரிழப்பு

கஞ்சா வழக்கில் தலைமறைவாக இருந்தவா் கைது

SCROLL FOR NEXT