இந்தியா

செங்கோட்டையில் இதுதான் பிரதமரின் கடைசி சுதந்திர தின உரை: மம்தா பானர்ஜி

இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் செங்கோட்டையில் பிரதமர் பேசுவதே அவரது கடைசி சுதந்திர தின உரையாக இருக்கும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

DIN

இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் செங்கோட்டையில் பிரதமர் பேசுவதே அவரது கடைசி சுதந்திர தின உரையாக இருக்கும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் சார்பில் சுதந்திர தினத்துக்கு முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார். 

அப்போது அவர் பேசியதாவது: இந்தியா கூட்டணி விரைவில் களத்தில் இறங்கி சிறப்பாக செயல்படும். தில்லி செங்கோட்டையில் நாளை நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் இடம்பெறும் பிரதமரின் உரை பிரதமராக அவர் கொடுக்கும் கடைசி உரையாக இருக்கும். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றும். இந்தியா கூட்டணி இந்தியா முழுவதும் பாஜகவை வீழ்த்தும். மேற்குவங்கத்தில் மாபெரும் அளவில் பாஜக வீழ்த்தப்படும். பிரதமர் ஆசை எனக்கு இல்லை. பாஜக வீழ்த்தப்பட வேண்டும். பாஜக ரஃபேல் போன்ற விஷயங்களில் ஊழலில் பெரிய அளவில் ஈடுபட்டுள்ளது. மேற்குவங்கத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. நாங்கள் ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். மத்திய அரசு மீது பல்வேறு ஊழல் புகார்கள் உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூா் மக்களவை உறுப்பினா் மக்களிடம் குறைகேட்பு

கடைகளில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

தாம்பரம், விழுப்புரம் இடையே 2 மெமு ரயில்கள் பகுதியளவு ரத்து

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டம்: தரவு தளத்தில் நவ.15-க்குள் விவசாயிகள் பதிவு செய்யலாம்

பழனி சண்முகநதியில் 12 டன் குப்பைகள் அகற்றம்

SCROLL FOR NEXT