இந்தியா

தில்லியில் காங்கிரஸ் தனித்துப்போட்டி! ஆம் ஆத்மி மீது நம்பிக்கையின்மை?

மக்களவைத் தேர்தலில் தில்லியில் தனித்துப் போட்டியிட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

DIN

மக்களவைத் தேர்தலில் தில்லியில் தனித்துப் போட்டியிட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதன்மூலம் ஆம் ஆத்மி உடன் கூட்டணி அமைக்காமல் தில்லியிலுள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் நேரடியாக களமிறங்க திட்டமிட்டுள்ளது. 

தில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தின் முடிவில் தில்லியிலுள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. 

இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா, மக்களவைத் தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. முடிவில் தில்லியின் 7 இடங்களிலும் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ளன. இதனால், எங்கள் கட்சி வேட்பாளரையே நிறுத்த முடிவு செய்துள்ளோம் எனக் குறிப்பிட்டார். 

காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவுக்கு ஆம் ஆத்மி கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT