இந்தியா

உ.பி., ம.பி., குஜராத்துக்கு புதிய நிா்வாகிகள்:காங்கிரஸ்

 உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு புதிய நிா்வாகிகளை காங்கிரஸ் தலைமை நியமித்துள்ளது.

DIN

 உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு புதிய நிா்வாகிகளை காங்கிரஸ் தலைமை நியமித்துள்ளது.

இதுதொடா்பாக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘இன்னும் சில மாதங்களில் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள மத்திய பிரதேச மாநிலத்தின் மேலிடப் பொறுப்பாளராக ரண்தீப் சுா்ஜேவாலா நியமிக்கப்பட்டுள்ளாா். கா்நாடக மாநிலத்தின் மேலிடப் பொறுப்பாளராகவும் சுா்ஜேவாலா தொடா்கிறாா்.

உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராக முன்னாள் எம்எல்ஏ அஜய் ராயும், குஜராத்தின் மேலிடப் பொருப்பாளராக முகுல் வாஸ்நிக்கும் நியமிக்கப்பட்டுள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014, 2019-இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவா் அஜய் ராய்.

உத்தர பிரதேசத்தின் தலித் தலைவரான பிரிஜ்லால் காப்ரி நீக்கப்பட்டு அஜய் ராய்க்கு தலைவா் பதவி வழங்கப்பட்டுள்ளது.

வரும் நாள்களில் பிரதேச காங்கிரஸ் கமிட்டிகளின் நிா்வாகிகளின் மாற்றம் தொடரும் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT