இந்தியா

ப்ரீ-பெய்டு மொபைல் திட்டங்களில் நெட்ஃபிக்ஸ்!: ஜியோ அறிவிப்பு!!

நெட்ஃபிக்ஸ் சந்தாவுடன் தொகுக்கப்பட்ட இரண்டு ப்ரீபெய்ட் மொபைல் திட்டங்களை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது.

DIN

புதுதில்லி: நெட்ஃபிக்ஸ் சந்தாவுடன் தொகுக்கப்பட்ட இரண்டு ப்ரீபெய்ட் மொபைல் திட்டங்களை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. இது நெட்பிளிக்ஸிற்கான உலகளாவிய முதல் ப்ரீபெய்ட் தொகுப்பாகும் என்று ஜியோ தெரிவித்துள்ளது.

நெட்ஃப்ளிக்ஸ் போன்ற உலகளாவிய நிறுவனங்களுடன் எங்கள் கூட்டணி வலிமையாக வளர்ந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் பின்பற்றக்கூடிய பயன்பாட்டு நிகழ்வுகளை நாங்கள் ஒன்றாக உருவாக்குகி வருகிறோம் என்றார் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கிரண் தாமஸ்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஜியோ போஸ்ட்பெய்ட் மற்றும் ஜியோ ஃபைபர் திட்டங்களில் நெட்ஃபிக்ஸ் சந்தா ஏற்கனவே கிடைத்து வரும் நிவையில்,  ப்ரீபெய்ட் திட்டத்தில் நெட்ஃபிக்ஸ் சந்தா கிடைப்பது இதுவே முதல் முறையாகும்.

பல ஆண்டுகளாக, நாங்கள் பல்வேறு வெற்றிகரமான உள்ளூர் நிகழ்ச்சிகள், ஆவணப்படங்கள் மற்றும் திரைப்படங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம், அவை இந்தியா முழுவதும் பார்வையாளர்களால் விரும்பப்படுகின்றன.

நெட்ஃபிக்ஸ் சந்தாவுடன் 84 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.1,099 மற்றும் ரூ.1,499 விலையுள்ள இரண்டு திட்டங்களை ஜியோ வழங்குகிறது.

ரூ.1,099 மதிப்புள்ள இந்த திட்டத்தில், நெட்ஃபிக்ஸ் மொபைல் சந்தா, வரம்பற்ற 5 ஜி டேட்டா அல்லது ஒரு நாளைக்கு 2 ஜிபி 4 ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளை ஜியோ வழங்கும்.

ரூ.1,499 என்ற உயர் திட்டத்தில் நெட்ஃபிளிக்ஸின் அடிப்படை அம்சத்தை வழங்கும் நிலையிலும், இது பயனர்கள் ஒரே நேரத்தில் மொபைல் அல்லது தொலைக்காட்சியில் பார்க்க அனுமதிக்கும்.

வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 84 நாட்கள் செல்லுபடியாகும் 2 ஜிபி டேட்டா திட்டத்தின் விலை ரூ.719 என்ற நிலையில், 3 ஜிபி டேட்டா கொண்ட அதே திட்டம் ரூ.999 முதல் தொடங்குகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

"சென்னை வந்த உடன் முடிகொட்டுகிறதா?" காரணம் இதுதான்! | Special Interview with Dr. Karthik Raja

ஒரு பார்வை போதும்... கஜோல்!

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

SCROLL FOR NEXT