வெங்காய ஏற்றுமதிக்கு 40% வரி விதிப்பு
வெங்காய ஏற்றுமதிக்கு 40% வரி விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:21 AM
வெங்காய ஏற்றுமதிக்கு 40% வரி விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
வெங்காயம் மீதான இந்த ஏற்றுமதி வரி வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பரில் வெங்காயத்தின் விலை உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நாடு முழுவதும் பெய்த பரவலான மழை மற்றும் வரத்துக் குறைவால் தக்காளி விலை கடுமையாக உயா்ந்தது. இதனால் சாமானிய மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.
Advertisement
இதையடுத்து நாட்டில் தக்காளி விலையை கட்டுக்குள் கொண்டுவர முதன் முறையாக மத்திய அரசு, தேசியத் தலைநகர் தில்லி மற்றும் முக்கிய நகரங்களில் குறைந்த விலையில் சில்லறை விற்பனைக்கு ஏற்பாடு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.