சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் 
இந்தியா

சத்தீஸ்கர் முதல்வரின் செய்தியாளர்கள் சந்திப்பில் புகுந்த பாம்பு!

சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல், செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

DIN

சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல், செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சத்தீஸ்கர் முதல்வர் திங்கள்கிழமை காலை செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது கூட்டத்துக்கு நடுவில் பாம்பு புகுந்ததால், செய்தியாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர்.

அந்த பாம்பை அடிக்க முயன்ற அதிகாரிகளை தடுத்த முதல்வர் பூபேஷ், “அது விசப் பாம்பு இல்லை. ஒன்றும் செய்யாது விட்டுவிடுங்கள்” எனக் கூறினார்.

தொடர்ந்து, கவர் மூலம் பாம்பை பிடித்து வேறு பகுதியில் விடச் சொன்ன முதல்வர், பாம்புகளை கொல்ல வேண்டாம் என்று மக்களிடம் கோரிக்கை வைத்தார்.

இந்த காணொலி வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அலிசா ஹீலி அதிரடி சதம்: ஆஸி. மகளிரணி ஆறுதல் வெற்றி!

புதிய துப்புரவு நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் அறிக்கை

உதகையில் பத்து ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கேபிள் காா் திட்டம்

பட்டானூரில் கூட்டப்பட்டது பாமக பொதுக்குழு அல்ல: கே.பாலு

திரிபுரா: சமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட ஆடியோக்களைப் பகிா்ந்த பாஜக நிா்வாகி நீக்கம்!

SCROLL FOR NEXT