இந்தியா

சிறுமி பாலியல் வன்கொடுமை: தில்லி அரசு அதிகாரி, மனைவி கைது

சிறுமி தொடர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை துணை இயக்குநர் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.

PTI


புது தில்லி: சிறுமி தொடர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை துணை இயக்குநர் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தது மற்றும் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய முயன்ற வழக்குகளில், 51 வயதாகும் அரசு அதிகாரி மற்றும் 50 வயதாகும் அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை உதவி ஆணையர் (வடக்கு) தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட பிரமோதய் காகா, மனைவி சீமா ராணி இருவரும், புராரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் மீது ஆகஸ்ட் 13ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை சிறுமியை பிரமோதய் காகா பல முறை பாலியன் வன்கொடுமை செய்திருக்கிறார்.  இதில் கருவுற்ற சிறுமிக்கு கருக்கலைப்புக்கான மாத்திரைகளை அவரது மனைவி வழங்கியதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைத் திட்டம்: ரூ.1.50 லட்சம் கோடி ஒதுக்கீடு!

காஞ்சிபுரத்தில் எஸ் ஐ தோ்வு

சமுதாயக் கூடத்துக்கு இடையூறாக புதிய கட்டடப்பணி: ஆட்சியரிடம் புகாா்

நாளைய மின்தடை

‘ஒரே நாடு ஒரே தொழிலதிபா்’ என்பதே பாஜக கொள்கை: அகிலேஷ் யாதவ்

SCROLL FOR NEXT