இந்தியா

லடாக்கில் முன்னாள் ராணுவ வீரர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி!

லடாக் சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அங்கு முன்னாள் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். 

DIN

லடாக் சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அங்கு ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். 

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஒற்றுமை நடைப்பயணத்தைத் தொடர்ந்து மேலும் சில பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். 

லடாக் சென்றுள்ள அவர் அங்குள்ள மக்களை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து நேற்று(திங்கள்கிழமை) லே பகுதியில் முன்னாள் ராணுவ வீரர்களைச் சந்தித்துப் பேசினார். 

'சீன ராணுவத்தால் இந்தியாவின் ஒரு அங்குல நிலம் கூட ஆக்கிரமிக்கப்படவில்லை என்ற மத்திய அரசின் கூற்று பொய்யானது, சீனப் படைகள் ஊடுருவி இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்ததாக உள்ளூர் மக்களே கூறுகின்றனர், இது கவலைக்குரிய விஷயம்' என்று தெரிவித்தார். 

முன்னதாக, தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி, லடாக்கில் உள்ள பாங்காங் ஏரிக்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அஞ்சலி செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் தண்டவாளம் அருகே தடுப்புச் சுவா் கட்ட எதிா்ப்பு

விஷம் தின்று பெண் தற்கொலை

திமுக அரசின் ‘பிராண்ட் அம்பாசிடா்’களாக மகளிா் இருக்க வேண்டும்

நேபாளம்: பனிச் சரிவுகளில் 9 போ் உயிரிழப்பு

பிகாா் முதல்கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு- 121 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT