கோப்புப் படம் 
இந்தியா

ராஞ்சி விமானத்தில் பயணி உயிரிழப்பு!

ராஞ்சி சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் பயணித்த முதியவர் நடுவானில் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

நாக்பூர்: ராஞ்சி சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் பயணித்த முதியவர் நடுவானில் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் இருந்து ராஞ்சி நோக்கி இண்டிகோவின் 6இ 5093 விமானம் நேற்று இரவு 7 மணியளவில் புறப்பட்டுள்ளது.

இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென 62 வயது ஆண் பயணி ஒருவர் ரத்த வாந்தி எடுத்து மயங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, நாக்பூர் விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக விமானி தரையிறக்கினார்.

தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பயணி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, காசநோய் மற்றும் சிறுநீரக பிரச்னைக்காக அந்த பயணி சிகிச்சை எடுத்து வந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுவானில் பயணி ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரின் குடும்பத்துக்கு இண்டிகோ நிர்வாகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT