இந்தியா

தென்னாப்பிரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி நான்கு நாள் பயணமாக தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு இன்று காலை தில்லியிலிருந்து விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். 

DIN

பிரதமர் மோடி நான்கு நாள் பயணமாக தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு இன்று காலை தில்லியிலிருந்து விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். 

பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15-ஆவது மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பா்க் நகரில் 22 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கரோனா தொற்று பரவலுக்குப் பிறகு நடைபெறும் முதல் நேரடி மாநாடு இதுவாகும்.

அதில் பங்கேற்பதற்காகப் பிரதமா் மோடி இன்று காலை தென்னாப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றார். மாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் கலந்து கொள்கிறாா். மாநாட்டின் ஒருபகுதியாக அவா்கள் இருவரும் சந்தித்துக் கொள்ள வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. 

பிரிக்ஸ் மாநாட்டின்போது பிரதமா் மோடியும் அதிபா் ஜின்பிங்கும் சந்தித்தால், கிழக்கு லடாக் மோதலுக்குப் பிறகு அவா்களுக்கு இடையேயான முதலாவது சந்திப்பாக இருக்கும். முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பரில் இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின்போது பிரதமா் மோடியும் அதிபா் ஜின்பிங்கும் பரஸ்பரம் வணக்கம் மட்டும் தெரிவித்துக் கொண்டனர்.

வரும் செப்டம்பரில் ஜி20 மாநாட்டை இந்தியா தில்லியில் நடத்தவுள்ளது. அதில் அதிபா் ஜின்பிங் நேரில் கலந்துகொள்வாா் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று தொடங்கவிருக்கும் இந்த மாநாட்டில், இயற்கை சீற்றம், உலக பொருளாதாரம் மற்றும் உணவு பஞ்சம் தீர்ப்பதில் முக்கிய முடிவுகள் விவாதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடியுடன் உலகக் கோப்பை வென்ற மகளிர் அணியினர் - புகைப்படங்கள்

தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நவ. 7இல் ‘வந்தே மாதரம்’ 150-ஆவது ஆண்டு கொண்டாட்டம்!

இதுபோன்ற துன்பம் எனக்கு முதல்முறை அல்ல; அத்துமீறிய நபர் மீது மெக்சிகோ அதிபர் புகார்!

தில்லியில் மோசமான நிலையில் காற்றின் தரம் - புகைப்படங்கள்

பார்த்த விழி... பாயல் தாரே!

SCROLL FOR NEXT