இந்தியா

தென்னாப்பிரிக்காவில் பிரதமர் மோடி!

பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15-ஆவது மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா சென்றடைந்தார். 

DIN

பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15-ஆவது மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா சென்றடைந்தார். 

பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15-ஆவது மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பா்க் நகரில் இன்று முதல் ஆக.24-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமா் மோடி இன்று காலை தில்லியிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார். இதனிடையே இன்று மாலை ஜோகன்னஸ்பெர்க் நகருக்குச் சென்றடைந்தார். 

இன்று தொடங்கவிருக்கும் பிரிக்ஸ் மாநாட்டில், இயற்கை சீற்றம், உலக பொருளாதாரம் மற்றும் உணவு பஞ்சம் தீர்ப்பதில் முக்கிய முடிவுகள் விவாதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

SCROLL FOR NEXT