இந்தியா

ரயில்வேயின் உண்மை நிலை தெரியுமா? வைரலாகும் படங்கள்!

DIN

நடுத்தர மக்கள் செல்லும் முன்பதிவு ரயிலில் கூட்டம் நிரம்பி வழியும் நிலையில், வந்தே பாரத் ரயில் இருக்கைகள் காலியாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

வந்தே பாரத் ரயிலில் அதிக அளவு கட்டணம்  வசூலிக்கப்படுவதால், சாதாரண விரைவு ரயிலில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பயணிப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு புதிய வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு நகரங்களில் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்து வருகிறார். 

பல்வேறு மாநிலங்களை இணைக்கும் வகையில், தற்போது நாடு முழுவதும் 15 நகரங்களில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. 

வந்தே பாரத் ரயில்கள் மணிக்கு 110 - 160 கிலோமீட்டர் வேகம் பயணிக்கக்கூடியவை. வந்தே பாரத் 4.0 வகை ரயில்கள் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகம் செல்லக்கூடியவை.

வந்தே பாரத் ரயிலில் AC இருக்கை (எகனாமி வகுப்பு) எக்ஸிகியூட்டிவ் இருக்கை என இரு வகையில் மட்டுமே இருக்கைகள் உள்ளன. 

மேலும், வந்தே பாரத் ரயிலில் கட்டணமும் சாதாரண ரயில் கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கப்படுகிறது. 

இதனால், நடுத்தர மக்கள் வந்தே பாரத் ரயிலைத் தவிர்த்து, சாதாரண ரயில்களில் பயணிக்கவே அதிக அளவில் விருப்பம் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில், வந்தே பாரத் ரயில் இருக்கைகள் காலியாக இருப்பதாகவும், சாதாரண விரைவு ரயிலில் அதிக எண்ணிக்கையில் கூட்டம் நிரம்பி வழிவதாகவும் இரண்டு புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. நரேந்திர மோடி ஆட்சியின் கீழ் ரயில்வே துறையின் உண்மையை புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வசதி படைத்தவர்களுக்காகவே இத்தகைய (வந்தே பாரத்) ரயில்கள் இயக்கப்படுவதாகவும், நடுத்தர மக்களுக்காக இந்த அரசு செயல்படவில்லை என்றும் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன.

மேலும், வந்தே பாரத் ரயில் மிகப்பெரிய தோல்வித் திட்டம் என்றும், நடுத்தர மக்களுக்கானது இல்லை என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த இரு புகைப்படங்களுமே பொய்யானவை என்றும் சிலர் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழில்முனைவோா் பட்டயப் படிப்பு: நாளை வழிகாட்டுதல் ஆலோசனைக் கூட்டம்

மரத்தின் மீது லோடு வேன் மோதி 9 போ் பலத்த காயம்

பாலியல் வழக்கில் எச்.டி. ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்

பெங்களூரில் போதை விருந்து: தெலுங்கு நடிகா்கள், நடிகைகள் சிக்கினா்

நாளைய மின் தடை

SCROLL FOR NEXT