இந்தியா

பிரதமா் மோடி தலைமை மீதுதலித் மக்கள் முழு நம்பிக்கை: மத்திய அமைச்சா் மேக்வால்

பிரதமா் நரேந்திர மோடியின் தலைமை மற்றும் கொள்கைகள் மீது தலித் மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனா் என்று மத்திய சட்டம், நீதித் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தாா்.

DIN

பிரதமா் நரேந்திர மோடியின் தலைமை மற்றும் கொள்கைகள் மீது தலித் மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனா் என்று மத்திய சட்டம், நீதித் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தாா்.

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் ஏற்கெனவே தோ்தலுக்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. தோ்தல் பணிகளை மேற்கொள்வதற்காக ராஜஸ்தான் வந்தாா்.

ராஜஸ்தானின் பிகானீா் தொகுதி எம்.பி.யான மேக்வால் முன்னிலையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஹனுமான் சிங், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் பரத்வாஜ், வருமான வரித் துறை முன்னாள் ஆணையா் நரேந்திர கௌா் மாநில அரசுகளில் உயா் பதவி வகித்தவா்கள், காங்கிரஸ் ஒபிசி பிரிவு தலைவா் கமல் ரத்தோா், உள்ளிட்ட பலா் பாஜகவில் இணைந்தனா்.

ஜெய்பூரில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனா். பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் திட்டங்களும், செயல்பாடுகளும் மக்களுக்கு முழு நம்பிக்கை அளித்துள்ளது. குறிப்பாக பிரதமா் மோடியின் தலைமை மற்றும் கொள்கைகள் மீது தலித் மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனா்.

சமூக, பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களில் அரசு முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறது. ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு ஒருதரப்பினரை திருப்திபடுத்தும் அரசியலை மட்டுமே நடத்துகின்றனா். மக்கள் நலப்பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குஜராத் கண்காட்சி விமரிசை! 40 லட்சம் பக்தர்கள், 5000 காவலர்கள், 1000 பேருந்துகள்!

சோயா பீன்ஸ் பிரச்னை! சீன அதிபருடன் டிரம்ப் சந்திப்பு!

குலசை தசரா: இன்று சூரசம்ஹாரம்!

திருப்பூர்: கட்டாய ஆள்குறைப்புக்குத் தள்ளப்படும் சிறு, குறு நிறுவனங்கள்

மத்தியப் பிரதேசம்: பாகிஸ்தான் கொடி அச்சிடப்பட்ட பலூன்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT