முகப்பு
இந்தியா

தில்லியில் அடுத்த 5 நாள்களுக்குான வானிலை நிலவரம்!

தலைநகர் தில்லியில் அடுத்த 5 நாள்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த காலகட்டத்தில் மழை பெய்யாது என்று கணிக்கப்பட்டுள்ளது.

Updated On : 24 ஆகஸ்ட் 2023, 7:44 pm IST
பகிர்:

புதுதில்லி: தலைநகர் தில்லியில் அடுத்த 5 நாள்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த காலகட்டத்தில் மழை பெய்யாது என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று அதிகபட்ச வெப்பநிலை சராசரியை விட ஒரு படி குறைவாக 33.2 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு டிகிரி குறைந்து 24.3 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பகிர்ந்து கொண்ட தரவுகளின்படி, தேசிய தலைநகரின் 24 மணி நேர சராசரி காற்று தரக் குறியீடு 85ஆக உள்ளது.

Advertisement

Advertisement

பூஜ்ஜியம் முதல் 50 வரையிலான காற்றின் தரக் குறியீடு நல்லது எனவும், 51 முதல் 100 திருப்திகரமானது எனவும், 101 மற்றும் 200 மிதமானது எனவும், 201 மற்றும் 300 மோசமானது எனவும், 301 மற்றும் 400 மிகவும் மோசமானது எனவும், 401 மற்றும் 500 கடுமையானது என்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.