இந்தியா

ஹிமாசல்: 10 கிமீ தூரத்துக்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்!

ஹிமாசலில் தொடர் கனமழை காரணமாக குலு - மண்டி சாலையில் சுமார் 10 கிமீ தூரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

DIN

ஹிமாசலில் தொடர் கனமழை காரணமாக குலு - மண்டி சாலையில் சுமார் 10 கிமீ தூரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

ஹிமாசல பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. பல சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் குலு பகுதியில் இருந்து மண்டி பகுதிக்குச் செல்லும் சாலை சேதமடைந்துள்ளதால் அங்கு 5 முதல் 10 கிமீ தூரத்துக்கு வாகங்கங்கள் அணிவகுத்து நிற்கின்றன. 

மணிக்கணக்கில் காத்துக் கொண்டிருப்பவர்கள், உண்பதற்குக் கூட தங்களிடம் எதுவுமில்லை, சாலையை சீரமைத்து விரைவில் திறக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். 

குலு எஸ்.பி, சாக்ஷி வர்மா கூறுகையில், கனமழை காரணமாக குலு - மண்டிக்குச் செல்லும் இரண்டு சாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மாற்று வழிச் சாலையும் போக்குவரத்துக்கான சூழ்நிலை இல்லை. பொதுப்பணித்துறையினர் நிலைமையை சரிசெய்யும் முயற்சியில் உள்ளனர் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT