இந்தியா

கேரளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பெண்கள் பலி

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில், ஜீப் ஒன்று சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 9 பேர் பலியாகினர்.

DIN

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில், ஜீப் ஒன்று சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 9 பேர் பலியாகினர்.

வயநாடு மாவட்டத்தில் ஜீப் விபத்துக்குள்ளானதில் பலியான 9 பேரில் பெரும்பாலானோர் பெண்கள் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாளப்புழாவில் உள்ள கன்னோத் என்ற மலைப்பகுதியில், மானந்தவாடி என்ற இடத்தில், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு வந்த ஜீப் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 25 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும், அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT