இந்தியா

நிலவில் லேண்டர் தரையிறங்கிய நாள் தேசிய விண்வெளி தினம்: பிரதமர் மோடி

நிலவில் லேண்டர் தரையிறங்கிய தினம் ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

DIN

நிலவில் லேண்டர் தரையிறங்கிய தினம் ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்து நாடுதிரும்பிய பிரதமா் மோடி, சந்திரயான்3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கி சாதனை படைத்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டுவதற்காக நேரடியாக பெங்களூருக்கு சென்றார்.

இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து, பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் அவர் தெரிவித்ததாவது:

நிலவில் சந்திரயான்-3  தரையிறங்கிய இடம் 'சிவசக்தி' என்று அழைக்கப்படும். நிலவில் லேண்டர் தரையிறங்கிய தினம் ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும். 

2019-ல் சந்திரயான் - 2 நிலவில் தனது தடத்தை பதித்த இடம் திரங்கா(மூவர்ணக்கொடி) என அழைக்கப்படும். எந்த தோல்வியும் இறுதியானது அல்ல என்பதை நமக்கு நினைவூட்டவே திரங்கா எனப் பெயர் சூட்டப்படுகிறது.

சந்திரயான்-3 வெற்றிக்கு பெண் விஞ்ஞானிகள் முக்கியப் பங்காற்றியுள்ளார்கள் என்று பிரதமர் மோடி பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT