இந்தியா

சூரியன், வெள்ளியை ஆய்வு செய்ய இஸ்ரோ தயாராகி வருகிறது: அனுராக் தாக்குர்

பிரதமர் நரேந்திர மோடியையும், சந்திரயான் - 3 திட்டக் குழுவையும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் புகழ்ந்து பேசியுள்ளார்.

DIN

பிரதமர் நரேந்திர மோடியையும், சந்திரயான் - 3 திட்டக் குழுவையும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் புகழ்ந்து பேசியுள்ளார்.

சந்திரயான் - 3 வெற்றியைத் தொடர்ந்து, தற்போது சூரியன் மற்றும் வெள்ளி கோளை ஆய்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: சந்திரயான் -3 வெற்றி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. உலக நாடுகள் இந்தியாவை பாராட்டி வருகின்றன. சந்திரயான் - 3 வெற்றி நமது நாட்டின் திறனையும், இளைஞர்களின் திறனையும் காட்டுகிறது.  இந்த சாதனை புதிய இந்தியாவின் அடையாளம். இது வெற்றியின் முதல் அடி. இந்த சாதனையின் பின்னணியில் நமது விஞ்ஞானிகள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பு உள்ளது. பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்று திரும்பிய பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் நமது விஞ்ஞானிகளை பாராட்டி ஊக்கப்படுத்தினார். முதலில் மங்கள்யான், பிறகு சந்திரயான் தற்போது சூரியன் மற்றும் வெள்ளிக்கு (கோள்) விண்கலம் அனுப்பி ஆராய்ச்சி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

நிலவில் சந்திரயான் - 3 தடம் பதித்த நாளான ஆகஸ்ட் 23 ஆண்டுதோறும் தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும் என பிரதமர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.12 லட்சத்தில் தனக்குத் தானே கல்லறை கட்டிய முதியவர் மரணம்!

மீண்டும் வெற்றிப்படம் கொடுத்த பகவந்த் கேசரி இயக்குநர்!

பிக் பாஸ் வீட்டில் துஷார்! காதல் பாடலைப் பாடி உற்சாகப்படுத்திய போட்டியாளர்கள்!

சர்வதேச காற்றாடித் திருவிழா! பட்டம் விட்டு மகிழ்ந்த பிரதமர் மோடி!

இயக்குநராகும் ஜித்து மாதவன் மனைவி!

SCROLL FOR NEXT