திருப்பதி 
இந்தியா

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த மூவருக்கு வாய்ப்பு!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக தமிழகத்தைச் சேர்ந்த மூவருக்கு ஆந்திர மாநில அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது.

DIN

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழுவில் தமிழகத்தைச் சோ்ந்த 3 பேருக்கு வாய்ப்பு வழங்கி ஆந்திர மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தேவஸ்தானம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆந்திர அரசால் நியமிக்கப்பட்டு வருகிறது. இந்த குழுவில் ஆந்திரா, தெலங்கானாவைச் சோ்ந்தவா்களுடன் தமிழகம், தில்லி, மும்பை, கா்நாடகா உள்ளிட்ட மாநிலத்தை சோ்ந்தவா்களுக்கும் தேவஸ்தானம் வாய்ப்பு வழங்கி வருகிறது.

இந்நிலையில் திருப்பதி எம்எல்ஏ கருணாகர ரெட்டியை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலா் குழு தலைவராக நியமித்துள்ள நிலையில் அவரின் கீழ் இதர உறுப்பினா்களின் நியமனத்தையும் ஆந்திர அரசு முடிவு செய்து அதற்குரிய அரசாணையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்நிலையில் ஆந்திர மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் 24 பேரை உறுப்பினா்களாக நியமித்துள்ளனா். அதில், தமிழகத்தின் சாா்பில் திருப்பூரைச் சோ்ந்த பாலசுப்பிரமணியம், சென்னையைச் சோ்ந்த டாக்டா் எஸ். சங்கா், கிருஷ்ணமூா்த்தி வைத்தியநாதன் உள்பட 24 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT