இந்தியா

கோசி இடைத்தேர்தல்: சமாஜவாதி வேட்பாளருக்கு காங்கிரஸ் ஆதரவு

கோசி சட்டப்பேரவை இடைத்தேர்தலில், சமாஜவாதிக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 

DIN

கோசி சட்டப்பேரவை இடைத்தேர்தலில், சமாஜவாதிக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கோசி சட்டப்பேரவைத் தொகுதிக்கு செப்டம்பர் 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் பாஜக சார்பில் தாரா சிங் சௌஹானும், சமாஜவாதி சார்பில் சுதாகர் சிங்கும் போட்டியிடுகின்றனர். அதேசமயம் காங்கிரஸும், பகுஜன் சமாஜ் கட்சியும் வேட்பாளரை முன்னிறுத்தாமல் போட்டியிலிருந்து விலகி உள்ளன. 
இந்த நிலையில் கோசி சட்டப்பேரவை இடைத்தேர்தலில், சமாஜவாதிக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் தனது ட்விட்டரில், இடைத்தேர்தலில் கோசியின் சமாஜவாதி வேட்பாளர் சுதாகர் சிங்கிற்கு ஆதரவையும் உதவியையும் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 
இதனிடையே காங்கிரஸ் மற்றும் சமாஜவாதி கட்சி இடையேயான இந்த ஆதரவு புதியதல்ல என்றும், 2024 பொதுத் தேர்தலை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்றும் உத்தர பிரதேச பாஜக துணைத் தலைவர் விஜய் பகதூர் விமர்சித்துள்ளார். கோசி இடைத்தேர்தல், ஆளும் பாஜகவுக்கும், முக்கிய எதிர்க்கட்சியான சமாஜவாதி கட்சிக்கும் இடையே நேரடிப் போட்டியாகக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT