இந்தியா

செப்.2ஆம் தேதி விண்ணில் பாய்கிறது ஆதித்யா-எல்1: இஸ்ரோ 

சந்திரயான்-3 வெற்றியைத் தொடா்ந்து, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல்1 விண்கலம் செப்டம்பர் 2ஆம் தேதி முற்பகல் 11.50 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. 

DIN

சந்திரயான்-3 வெற்றியைத் தொடா்ந்து, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல்1 விண்கலம் செப்டம்பர் 2ஆம் தேதி முற்பகல் 11.50 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. 

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சிஎல் ராக்கெட் மூலம் குறைந்த பூமி சுற்றுப்பாதையில் ஆதித்யா-எல்1 விண்கலம் நிலைநிறுத்தப்படவிருக்கிறது. பிறகு இங்கிருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லெக்ரேஞ்ச் புள்ளிக்கு விண்கலம் செலுத்தப்படவிருக்கிறது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

1475 கிலோ எடைகொண்ட ஆதித்யா விண்கலம் விண்ணில் செலுத்தப்படுவதை நேரில் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும், இதற்கு என்ற இணையதளத்தில் பொதுமக்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே நிலவின் தென்துருவத்துக்கு மிக அருகே தடம் பதித்த முதல் நாடு என்ற பெருமையைப் பெற வைத்த இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, அடுத்து தனது பார்வையை சூரியன் பக்கம் திருப்பியிருக்கிறது.

சூரியனை ஆராய ஆதித்யா-எல்1 என்ற விண்கலம் செப்டம்பரில் விண்ணில் செலுத்தப்படும் என்று ஏற்கனவே இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்திருந்த நிலையில், செப்டம்பர் 2ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தடம் பதித்த அன்று செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், இந்த வெற்றியைத் தொடா்ந்து, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல் 1 விண்கலம் அடுத்த மாதம் (செப்டம்பா்) விண்ணில் ஏவப்படும் என்று அறிவித்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரானுடன் உறவை முறித்த ஆஸ்திரேலியா! தூதர் வெளியேற உத்தரவு!

காதலே காதலே... ஐஸ்வர்யா லட்சுமி!

நொய்டா வரதட்சிணை கொலையில் திடீர் திருப்பம்: நிக்கியின் கணவர் மீது ஏற்கனவே வழக்கு!

4 ஆண்டு தடைக்குப் பின்... ஒருநாள் அணிக்குத் திரும்பும் ஜிம்பாப்வே ஜாம்பவான்!

வெள்ளத்தில் மூழ்கிய 170 கிராமங்கள்: ஒடிசாவில் 2 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

SCROLL FOR NEXT