இந்தியா

ஆதித்யா எல்-1: விண்ணில் பாய்வதற்கான ஒத்திகை நிறைவு!

ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் செலுத்துவதற்கான ஒத்திகை நிறைவடைந்ததாக இஸ்ரோ புதன்கிழமை அறிவித்துள்ளது.

DIN


ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் செலுத்துவதற்கான ஒத்திகை நிறைவடைந்ததாக இஸ்ரோ புதன்கிழமை அறிவித்துள்ளது.

கடந்த மாதம் சந்திரயான் 3 விண்கலத்தில் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர், நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்தது.

நிலவின் தென் துருவப் பகுதியில் ‘விக்ரம்’ லேண்டரும், ‘பிரக்யான்’ ரோவரும் தொடா்ந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த ஆய்வுகள் நிலவு சாா்ந்த புதிய தரவுகளை வழங்கி வருகின்றன. அது எதிா்காலத் திட்டங்களுக்குப் பெரும் பலன் அளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சூரியனை ஆய்வு செய்வதற்காக ‘ஆதித்யா-எல்1’ விண்கலத்தை இஸ்ரோ செப்டம்பா் 2-ஆம் தேதி முற்பகல் 11.50-க்கு விண்ணில் செலுத்தவுள்ளது.

இதற்கான ஒத்திகை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ள நிலையில், வரும் சனிக்கிழமை ஆதித்யா எல்-1 விண்ணில் பாய்வது உறுதியாகியுள்ளது.

சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பும் முதல் விண்கலம் இதுவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்... ரெஜினா!

ஜம்மு - காஷ்மீரில் ஒரே நாளில் 380 மி.மீ. மழை! நூறு ஆண்டுகளில் அதிகபட்சம்!

வன்கொடுமை வழிகாட்டி மையத்தில் பணி: விண்ணப்பிக்க செப்.4 கடைசி நாள்

பென்ஸ் படத்தில் ரவி மோகன்!

விஜய் அரசியல் ரீதியாக பேச வேண்டும் : முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கருத்து

SCROLL FOR NEXT