முகப்பு
இந்தியா

வருடாந்திர பிரமோற்சவம்: செப்.18 முதல் 26 வரை திருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து

திருமலை ஏழுமலையான் கோயில்  நடைபெறும் வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி, விஐபி தரிசனம் செப்டம்பர் 18 முதல் 26 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:10 PM
திருப்பதி
பகிர்:


திருமலை ஏழுமலையான் கோயில்  நடைபெறும் வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி, விஐபி தரிசனம் செப்டம்பர் 18 முதல் 26 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருமலை ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் 2 பிரமோற்சவங்கள் நடைபெற உள்ளது. அதற்கான போஸ்டர் வெளியீடு நிகழ்ச்சி ஏழுமைலையான் கோயில் முன்பு புதன்கிழமை நடைபெற்றது. 

இதில் அறங்காவலர் குழுத் தலைவர் கருணாகரன் தெரிவித்ததாவது:
வருடாந்திர பிரமோற்சவம் செப்டம்பர் 18  ஆம் தேதி முதல்  26 ஆம் தேதி வரையிலும், நவராத்திரி பிரமோற்சவம் நவம்பர் 15 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. வருடாந்திர பிரமோற்சவத்தின் முதல் நாள் மாநில அரசு சார்பில் ஏழுமலையானுக்கு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கிறார்.  

வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி, திருமலை ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளது.

மேலும் வாகன சேவைகள் மூலம் பக்தர்களுக்கு சிறப்பான தரிசனம் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

திருமலை ஏழுமலையான் கோயிலில் மாதந்தோறும் பௌர்ணமியையொட்டி, மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதன்படி, இன்று வியாழக்கிழமை நடைபெற இருந்த கருட சேவை விகானச மஹாமுனி ஜெயந்தியை முன்னிட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →