தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்வின் கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டதாக ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியின் தலைவர் ஒய்.எஸ். சர்மிளா தெரிவித்துள்ளார்.
தில்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை ஒய்.எஸ். சர்மிளா நேரில் சென்று சந்தித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஒய்.எஸ். சர்மிளா,
சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை இன்று நேரில் சென்று சந்தித்தேன். ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் நடந்தது. மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன். நான் ஒன்றை மட்டும் கூற விரும்புகிறேன். தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்வின் கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.