இந்தியா

சோனியா, ராகுல் காந்தியுடன் ஒய்.எஸ்.ஷர்மிளா சந்திப்பு!

ஒய்.எஸ். ஷர்மிளா வியாழக்கிழமை தில்லியில் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா மற்றும்  காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியுடனான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

DIN

ஹைதராபாத்:  காங்கிரஸ் கட்சியுடன் ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியை இணைக்கப்போவதாக பரவி வரும் வதந்திகளுக்கு மத்தியில், அந்த கட்சியின் தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா வியாழக்கிழமை தில்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியுடனான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஷர்மிளா, தெலங்கானா அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் மேலிடத் தலைவர்களை சந்தித்ததாகவும், ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியை நிறுவியதில் இருந்து தெலங்கானா மக்களை பாதிக்கும் பல்வேறு பிரச்னைகளில் தான் பணியாற்றி வருவதாகவும் கூறினார்.

முதல்வர் சந்திரசேகர் ராவ் மற்றும் பிஆர்எஸ் அரசின் தோல்விக்கான கவுன்டவுன் தொடங்கிவிட்டதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும், அவர் தனது கட்சியை காங்கிரஸுடன் இணைக்கும் திட்டம் குறித்த எந்த தகவலையும் வெளியிடாமல் மௌனத்தையே பதிலாக அளித்து வந்தார்.

இந்த நிலையில் ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியை காங்கிரஸுடன் இணைக்க முடிவு செய்தால் அதனை வரவேற்போம் என காங்கிரஸ் தலைவர்கள் கூறி வந்தனர்.

ஆந்திரம் பாலேரு தொகுதியில் போட்டியிட ஷர்மிளா முதலில் விருப்பம் தெரிவித்திருந்தாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் முதல்வர் ராஜசேகரின் மகளும், ஆந்திரம் முதல்வர் ஜெகன்மோகனின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா, 2019 சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஜெகன் மோகன் ரெட்டிக்காக தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்தார், பின்னர்  ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியைத் தொடங்கினார்.

ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியை காங்கிரஸ் கட்சியில் இணைத்தால் காங்கிரஸ் மேலும் வலுப்பெறும் என்பதால் தொடர்ந்து டி.கே.சிவகுமார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான கே. வி.பி.ராமச்சந்திரராவ் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வேயில் வேலை வேண்டுமா?: விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு!

இப்போதும் மேக்கப் போடுவதற்கு முன் பாக்கியராஜை நினைப்பேன்: ஊர்வசி

வாக்குத் திருட்டு: வீட்டு எண் பூஜ்யம், ஒரே முகவரியில் 45 பேர்.. குற்றச்சாட்டுகளை அடுக்கிய ராகுல்!

பொதுத்துறை நிறுவனத்தில் சிவில், எலக்ட்ரிக்கல் பொறியாளர் வேலை!

வாக்குத் திருட்டு! சான்றுகளுடன் ராகுல் சரமாரி குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT