சஞ்சய் ரெளத் | கோப்புப் படம் 
இந்தியா

சஞ்சய் ரெளத்துக்கு ஜாமீன்!

அவதூறு வழக்கில் ஜாமீன் வழங்கி விசாரணையை பின்னர் ஒத்திவைத்தது நீதிமன்றம்.

DIN

சிவ சேனை கட்சித் தலைவர் சஞ்சய் ரெளத்துக்கு எதிராக அமைச்சர் தாதா பூசே தொடர்ந்த அவதூறு வழக்கில் ரெளத்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது மகாராஷ்டிர மாலேகான் நீதிமன்றம்.

ராஜ்ய சபா உறுப்பினரான சஞ்சய் ரெளத் நீதிமன்றம் முன்பு ஆஜரானார். அவருக்கு ஜாமீன் வழங்கியதோடு பிப். 3, 2024-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது, நீதிமன்றம்.

நாசிக் மாவட்டத்தில் கிர்ணா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ரூ.178 கோடி ஊழலில் ஈடுபட்டதாக தாதா பூசே மீது சஞ்சய் ரெளத் குற்றம் சாட்டினார்.

இதனை எதிர்த்து நாசிக் சட்டப்பேரவை உறுப்பினரான தாதா பூசே, சஞ்சய் ரெளத்துக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

ஜாமீன் பெற்ற பிறகு சஞ்சய் ரெளத் நீதிமன்ற வளாகத்தில், பூசேவை விமர்சித்துள்ளார்.

அவர், “அரசியலமைப்பு சட்டத்தின்படி, திருடனை திருடன் என அழைக்க எனக்கு உரிமையுண்டு. அமைச்சர் பணத்தை எதற்கு பயன்படுத்தினார் எனக் கேட்டதற்கு என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. எந்த நிலையிலும் நான் பணிந்து போக மாட்டேன், ஊழல் விஷயத்தில் ஒருபோதும் சமரசம் கிடையாது” எனப் பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த காா்

குண்டா் தடுப்புக் காவலில் இளைஞா் கைது

விருத்தாசலம் அரசு கல்லூரி மாணவா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

மொபெட் மீது காா் மோதல்: முதியவா் மரணம்

கஞ்சா விற்பனை: 4 போ் கைது

SCROLL FOR NEXT