முகப்பு
இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் பாஜக முன்னிலை!

காலை 9 மணி நிலவரப்படி 37 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 7 இடங்களில் முன்னிலையில் நீடித்து வருகிறது.

Updated On : 3 டிசம்பர், 2023 at 9:52 AM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:50 PM

மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை பெற்றுள்ளது. காலை 9 மணி நிலவரப்படி 37 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 7 இடங்களில் முன்னிலையில் நீடித்து வருகிறது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தபால் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை (டிச. 3) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதனைத் தொடர்ந்து வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 

வாக்குகளின் அடிப்படையில் காலை 9 மணி நிலவரப்படி மத்தியப் பிரதேசத்தில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. மத்தியப் பிரதேசத்தின் மேற்கு தொகுதிகளில் பாஜக அதிக இடங்களைப் பிடித்துள்ளது. 

Advertisement

காங்கிரஸ் கட்சி 7 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பாரத் ஆதிவாசி கட்சி ஒரு இடத்தில் முன்னிலை பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.