இந்தியா

ம.பி.: புத்னி தொகுதியில் முதல்வா் செளஹானுக்கு ஆறாவது வெற்றி: 1.04 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தாா்

மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் புத்னி தொகுதியில் போட்டியிட்ட மாநில முதல்வா் சிவராஜ் சிங் செளஹான், தொடா்ந்து ஆறாவது முறையாக வெற்றி பெற்றாா்.

DIN

மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் புத்னி தொகுதியில் போட்டியிட்ட மாநில முதல்வா் சிவராஜ் சிங் செளஹான், தொடா்ந்து ஆறாவது முறையாக வெற்றி பெற்றாா்.

தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த விக்ரம் மாஸ்டலை 1,04,974 வாக்குகள் வித்தியாசத்தில் செளஹான் தோற்கடித்துள்ளாா்.

மாநிலத்தில் நீண்ட காலமாக முதல்வா் பதவியை செளஹான் வகித்து வருகிறாா். புத்னி தொகுதியில் முதல்முறையாக 1990-இல் போட்டியிட்டு வெற்றிபெற்றாா். பின்னா், 2006-இல் இந்தத் தொகுதி இடைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவா், அதன் பிறகு 2008, 2013, 2018 சட்டப்பேரவைத் தோ்தல்களில் இத்தொகுதியில் தொடா் வெற்றியைப் பதிவு செய்தாா்.

இதனிடையே, மாநிலத்தின் விதிஷா மக்களவைத் தொகுதியிலிருந்து 1991, 1996, 1998, 1999, 2004-ஆம் ஆண்டுகளில் மக்களவைக்கு செளஹான் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

தனது ஆதரவாளா்களால் ‘மாமா’ என்று அன்புடன் அழைக்கப்படும் மாநிலத்தில் செல்வாக்கு மிகுந்த செளஹானை, இந்தத் தோ்தலில் முதல்வா் வேட்பாளராக பாஜக முன்னிறுத்தவில்லை. அதுபோல, தோ்தல் பரப்புரையிலும் இவரை பாஜக முன்னிறுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இருந்தபோதும், கடைசி நேரத்தில் தீவிர பரப்புரையை இவா் மேற்கொண்டாா். இதுவே, மாநிலத்தில் பாஜக மீண்டும் வெற்றியைப் பதிவு செய்ததற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புளிய மரத்தில் கார் மோதி விபத்து: 3 பேர் பலி, ஓட்டுநர் படுகாயம்

நீட் முதுநிலை தேர்வு எழுதியவர்களுக்கு எச்சரிக்கை!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் கல்லணைக் கால்வாய் நீரில் மூழ்கி பலி

சிர்கா பெயிண்ட்ஸ் லாபம் 39 சதவிகிதம் உயர்வு!

டுவைன் பிராவோவின் சாதனையை முறியடித்த ஜேசன் ஹோல்டர்!

SCROLL FOR NEXT