இளைஞரணிக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 
இந்தியா

இந்தியாவை அதானி கையில் ஒப்படைத்துவிட்டார் பிரதமர்!: அமைச்சர் உதயநிதி

பிரதமர் மோடி இந்தியாவை அவரது நண்பர் அதானி கையில் ஒப்படைத்துவிட்டார் எனக் கோவையில் நடைபெற்ற இளைஞரணிக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். 

DIN

பிரதமர் மோடி இந்தியாவை அவரது நண்பர் அதானி கையில் ஒப்படைத்துவிட்டார் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.  

கோவையில் நடைபெற்ற இளைஞரணிக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், மத்தியில் பா.ஜ.க. ரூ.7.5லட்சம் கோடி மதிப்பில் ஊழல் செய்துள்ளதாக சிஐஏ அறிக்கை வெளியிட்டிருப்பதைக் கூறினார்.  

மத்திய அரசிற்கு தமிழ்நாடு ரூ.9.5 லட்சம் கோடி வரிப்பணம் செலுத்தியுள்ளது, எனினும் தமிழ்நாட்டிற்கு வழக்கப்பட வேண்டிய பாக்கி தொகையை இன்னும் அளிக்கவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும், நீட் தேர்வால் இதுவரை 20 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர், 70 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராகக் கையொப்பமிட்டுள்ளனர் எனவும் அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். 

மேலும், திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் 2024 மாநிலங்களவைத் தேர்தலுக்கு முன் நடைபெறும் எனக் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT