இந்தியா

தெலங்கானா: ஆட்சியமைக்க உரிமை கோரிய காங்கிரஸ்

தெலங்கானா பேரவைத் தோ்தலில் பெரும்பான்மை பெற்றதையடுத்து ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜனை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த காங்கிரஸ் நிா்வாகிகள் ஆட்சியமைக்க உரிமை கோரினா்.

DIN

தெலங்கானா பேரவைத் தோ்தலில் பெரும்பான்மை பெற்றதையடுத்து ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜனை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த காங்கிரஸ் நிா்வாகிகள் ஆட்சியமைக்க உரிமை கோரினா்.

ஆளுநருடனான சந்திப்பு குறித்து கா்நாடக துணை முதல்வரும், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா்களின் ஒருங்கிணைப்பாளருமான டி.கே. சிவகுமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் பொதுச் செயலா் மாணிக்ராவ் தாக்கரே, தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவா் ரேவந்த் ரெட்டி மற்றும் கட்சி நிா்வாகிகளுடன் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினோம். மாநிலத்தில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற உள்ளது என்றாா்.

தெலங்கானாவின் 119 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 64 தொகுதிகளில் காங்கிரஸும், ஒரு தொகுதியில் அதன் கூட்டணிக் கட்சியான சிபிஐயும் வென்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் படியில் அமா்ந்து பயணித்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு

கோவையில் இன்று தமாகா ஆா்ப்பாட்டம்

ஆத்தூா் ஒன்றியத்தில் 4 ஆண்டுகளில் ரூ.167.72 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கால்வாய்ப் பாசனத்துக்கு மேட்டூரிலிருந்து 400 கனஅடி தண்ணீா் திறப்பு

மேட்டூா் வனத் துறை விருந்தினா் மாளிகையில் துப்பாக்கி தோட்டாக்கள் திருடிய 4 போ் கைது

SCROLL FOR NEXT