கோப்புப் படம். 
இந்தியா

மிசோரம் துணை முதல்வர் டவ்ன்லூயா தோல்வி

துய்சாங்கில் தொகுதியில் போட்டியிட்ட மிசோரம் துணை முதல்வர் டவ்ன்லூயா தோல்வியை சந்தித்துள்ளார். 

DIN

துய்சாங்கில் தொகுதியில் போட்டியிட்ட மிசோரம் துணை முதல்வர் டவ்ன்லூயா தோல்வியை சந்தித்துள்ளார். 

மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி திங்கள்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. மாநிலம் முழுவதும் 13 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் சட்டப்பேரவையில் 26 இடங்களில் சோரம் மக்கள் இயக்கம் முன்னணி (இசட்.பி.எம்.) வகிக்கிறது. 

மிசோரம் தேசிய முன்னணி (எம்.என்.எஃப்.) 10 இடங்களிலும், பாஜக 3 மற்றும் காங்கிரஸ்  ஒரு இடங்களிலும் முன்னணி வகித்து வருகின்றன. இந்த நிலையில் துய்சாங்கில் தொகுதியில் எம்என்எஃப் சார்பில் போட்டியிட்ட மிசோரம் துணை முதல்வர் டவ்ன்லூயா தோல்வியை சந்தித்துள்ளார். 

சோரம் மக்கள் இயக்கத்தின் (இசட்பிஎம்) வேட்பாளர் டபிள்யூ சுவானாவ்மா 6,988 வாக்குகளும் மிசோ தேசிய முன்னணியின் (எம்என்எஃப்) தவ்லூயா 6,079 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் 1,674 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர் 67 வாக்குகளும் பெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT