இந்தியா

மிசோரம் யாருக்கு? முன்னணியில் சோரம் மக்கள் இயக்கம்!

மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் சோரம் மக்கள் இயக்கம் முன்னணி வகிக்கிறது.

DIN

மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கப்பட்டது.

ஏற்கெனவே, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கா் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.

மிசோரமில் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் பண்டிகை என்பதால் மக்களின் கோரிக்கையை ஏற்று, அந்த மாநிலத்தில் மட்டும் வாக்கு எண்ணிக்கை ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் சட்டப்பேரவையில் 26 இடங்களில் சோரம் மக்கள் இயக்கம் முன்னணி (இசட்.பி.எம்.) வகிக்கிறது. மிசோரம் தேசிய முன்னணி (எம்.என்.எஃப்.) 10 இடங்களிலும், பாஜக 3 மற்றும் காங்கிரஸ்  ஒரு இடங்களிலும் முன்னணி வகித்து வருகின்றன. (காலை 10.10 மணி நிலவரம்)

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்களில் பாஜகவும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸும் ஆட்சியை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT