இந்தியா

சத்யேந்தர் ஜெயினுக்கு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு

DIN

தில்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை அடுத்த விசாரணை வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது. 

தில்லி முன்னாள் அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான சத்யேந்தர் ஜெயின் பணமோசடி வழக்கு தொடர்பாக கடந்தாண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். 

அதையடுத்து அவருக்கு உடல்நலக் குறைவு காரணமாக ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அதனைப் பரிசீலித்த நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இடைக்கால ஜாமீன் முடிவடைந்த நிலையில் வழக்கு நவ.24-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அதனை விசாரிக்கும் நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா அன்று ஆஜராகாததால் நீதிபதி பெலா எம்.திரிவேதி அமர்வு இந்த வழக்கை டிசம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் பெலா எம்.திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர ஷர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு பட்டியலிடப்பட்டது. சத்யேந்தர் ஜெயின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சிங்வி, இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த அமர்வு விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை ஜனவரிக்கு ஒத்திவைத்து, அதுவரை சத்யேந்தர் ஜெயினின் இடைக்கால ஜாமீனை நீட்டித்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை உயா் கல்வி விழிப்புணா்வு நிகழ்ச்சி

இளம்பெண்கள் மீது தொடா்ச்சியாக தாக்குதல் நடத்தப்படுவது குறித்து விசாரணை

அரசுப் பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையை மீண்டும் செயல்படுத்தக் கோரிக்கை

காஞ்சிபுரத்தில் இன்று சம்ஸ்கிருத கருத்தரங்கம்: தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு

தோ்ச்சி பெறாத பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு சிறப்பு வகுப்பு: தலைமையாசிரியா்களுக்கு வேலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT