பிரதமர் மோடியுடன் ராஜிநாமா செய்த பாஜக எம்.பி.க்கள் 
இந்தியா

மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்பட பாஜக எம்.பி.க்கள் 10 பேர் ராஜிநாமா!

மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்பட  பாஜக  எம்.பி.க்கள் 9 பேரின் ராஜிநாமா கடிதங்களை, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார்.

DIN

தில்லி : சமீபத்தில் நடந்து முடிந்த, 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள பாஜகவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் 9 பேரின் ராஜிநாமா கடிதங்களை, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று(டிச.7)  ஏற்றுக்கொண்டார்.

சமீபத்தில் நடந்து முடிந்த, 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்ட  மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர் மற்றும் பிரகலாத் படேல் உள்பட பாஜகவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் 9 பேர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தங்களது மக்களவை உறுப்பினர் பதவியை நேற்று(டிச.6) ராஜிநாமா செய்தனர். அவர்களுடன் சேர்த்து மாநிலங்களவை உறுப்பினர் கிரோடி லால் மீனா, தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் தாங்கள் வெற்றி பெற்றுள்ள மாநிலங்களில், எம்.எல்.ஏ.க்களாக பொறுப்பேற்க உள்ளனர். மக்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ள எம்.பி.க்கள் விபரம் வருமாறு : மத்திய வேளாண் துறை  அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பிரகலாத்சிங் படேல், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ராகேஷ் சிங், உத்யா பிரதாப் சிங் மற்றும் ரித்தி பதக்,  ராஜஸ்தானைச் சேர்ந்த கிரோடி லால் மீனா, தியா குமாரி மற்றும் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்,  சத்தீஸ்கரை சேர்ந்த கோமதி சாய் மற்றும் அருண் சாவ்.

மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ள நரேந்திர சிங் தோமர் மற்றும் பிரகலாத்சிங் படேல் ஆகிய இருவரும், மத்தியப் பிரதேச எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்முறையாக தேசிய விருது: சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.87.53 ஆக நிறைவு!

கேஷுவல் லுக்.. ஈஷா ரெப்பா!

வாத்தி படத்துக்காக ஜி.வி. பிரகாஷுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது!

முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

SCROLL FOR NEXT