கோப்புப் படம் 
இந்தியா

பாலியல் விருப்பத்தை.. கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

கொல்கத்தா உயர் நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்கு உச்ச நீதிமன்றம் கடுமையான விமரிசனத்தைப் பதிவு செய்திருக்கிறது.

DIN

புது தில்லி: இளஞ்சிறுமிகள் பாலியல் ஆசைகளை அடக்கிக் கொள்ள வேண்டும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதற்கு உச்ச நீதிமன்றம் கடுமையான விமரிசனத்தைப் பதிவு செய்திருக்கிறது.

இதுபோன்ற கருத்துகள் தேவையற்றது மற்றும் ஆட்சேபத்துக்குரியது என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதிககள் ஏஎஸ் ஓகா, பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு,கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் கருத்துகள் அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் இளம் பருவத்தினரின் உரிமைகளை மீறுவதாகும் என்று தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக, நீதிபதிகள் எல்லாம் அவர்களது தனிப்பட்ட கருத்துகளை அல்லது பிரசங்கம் செய்வோராக இருப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்டு, இந்த வழக்கு தொடர்பாக மேற்கு வங்க அரசு உள்ளிட்டோருக்கு நோட்டிஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளனர்.

கடந்த அக்டோபர் 18ஆம் தேதி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வந்த வழக்கு ஒன்றில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், ஒவ்வொரு இளம்பெண்களும் தங்களது பாலியல் ஆசைகளை கட்டுபப்டுத்திக் கொள்ள வேண்டும், வெறும் 2 நிமிட பாலியல் இன்பத்துக்காக, பெண்கள் இந்த சமூகத்தின் முன் தோற்றவர்களாக மாறிவிடக்கூடாது என்று கருத்துக் கூறியிருந்தனர். இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏறுமுகத்தில் இந்திய ஏற்றுமதி

வோடஃபோன் ஐடியா இழப்பு அதிகரிப்பு

டிரம்ப்பின் அவசரநிலையை எதிா்த்து வாஷிங்டன் மாநகராட்சி வழக்கு

ரூ. 1.70 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள் பறிமுதல்

தடகளம்: தங்கத்துடன் அங்கிதா தேசிய சாதனை

SCROLL FOR NEXT