கோப்புப்படம் 
இந்தியா

பிகார்: அமித் ஷா தலைமையில் 4 மாநில முதல்வர்களின் ஆலோசனைக் கூட்டம்

பிகாரில் நான்கு மாநில முதல்வர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம், உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நாளை(டிச.10) நடைபெற உள்ளது.

DIN

தில்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் பிகார், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம், ஆகிய 4 மாநிலங்களை உள்ளடக்கிய கிழக்கு மண்டல கூட்டமைப்பின் 26வது ஆலோசனைக் கூட்டம் நாளை(டிச.10) பிகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில், 4 மாநில முதல்வர்கள், மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில், சிறுதானியங்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம், உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், நீர் பங்களிப்பு உள்ளிட்ட முக்கியப் விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

கிழக்கு மண்டல கூட்டமைப்பின் துணைத்தலைவராக பிகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT