கோப்புப் படம். 
இந்தியா

கேரளம்: தற்கொலை செய்வதற்கு முன் தனக்குத்தானே இரங்கல் தெரிவித்துக்கொண்ட இளைஞர்

கேரளத்தில் தற்கொலை செய்வதற்கு முன் இளைஞர் ஒருவர் தனக்குத்தானே இரங்கல் தெரிவித்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

DIN

கேரளத்தில் தற்கொலை செய்வதற்கு முன் இளைஞர் ஒருவர் தனக்குத்தானே இரங்கல் தெரிவித்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளம் மாநிலம்,  ஆலுவாவைச் சேர்ந்த இளைஞர் அஜ்மல் ஷெரீஃப்(28). இவர் வெள்ளிக்கிழமை தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

உடற்கூராய்வுக்கு பின் அஜ்மலின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நல்ல வேலை கிடைக்காததால் அஜ்மல் சற்று மன உளைச்சலில் இருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்ததாக காவல்துறையினர் கூறினர். 

அஜ்மல் தற்கொலை செய்வதற்கு முன் இன்ஸ்டாவில், தனது புகைப்படத்தை பகிர்ந்து அதில் 'ரிப் அஜ்மல் ஷெரீஃப் 1995-2023' என்று தனக்குத்தானே இரங்கல் தெரிவித்திருக்கிறார். அஜ்மலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 14,000க்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்! தனுஷுக்கு நன்றி!

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம்: அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

பிரபல கல்வியாளர் வசந்தி தேவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இந்தியாவுக்கு எதிராக பென் டக்கெட் - ஸாக் கிராலி இணை சாதனை!

Shahrukh Khan-க்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது

SCROLL FOR NEXT