கோப்பு 
இந்தியா

அடுக்குமாடிக் குடியிருப்பில் பெண்ணின் சடலம்

அடுக்கு மாடிக் குடியிருப்பில் உள்ள வீட்டில் துர்நாற்றம் வரவே காவலர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

DIN

புது தில்லி: 30 வயது மதிக்கத்தக்க பெண், தெற்கு தில்லியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தில்லி மாள்வியா நகர் காவலர்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு விரைந்தனர். அந்தக் குடியிருப்பில் இருந்த பெண் ஒருவரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் பரவுவதாக பக்கத்து வீட்டார் காவலர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

உள்புறமாகத் தாளிடப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து திறந்த காவலர்கள் சனியா ராய் என்கிற பெண்ணின் உடலைக் கண்டறிந்துள்ளனர். அவர் ஏற்கெனவே உயிரிழந்த நிலையில், வெளிப்புறக் காயங்கள் எதுவுமில்லை எனக் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

உடற்கூராய்வுக்கு பெண்ணின் உடல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்மநாபசுவாமி கோயிலில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் லட்ச தீபம் திருவிழா கோலாகலம்!

ஜப்பானிய வங்கிக்கு ஆர்பிஐ ஒப்புதல்!

சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா: பறை இசைத்து தொடங்கி வைத்த முதல்வர் மு. க. ஸ்டாலின்!

கென் கருணாஸின் புதிய திரைப்படத்துக்கு விஜய் படத்தலைப்பு - போஸ்டர் வெளியீடு!

வேதாந்தா பங்குகள் அதிரடியாக உயர்வு!

SCROLL FOR NEXT