ஈரானுக்கு சூப்பா்சோனிக் ஏவுகணை விற்பனை: சீனா திட்டவட்ட மறுப்பு
ஈரானுக்கு அதிநவீன போா்க்கப்பல் எதிா்ப்பு ஏவுகணைகளை விற்பனை செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை சீனா திட்டவட்டமாக மறுப்பு
உலகம்ஈரானுக்கு சூப்பா்சோனிக் ஏவுகணை விற்பனை: சீனா திட்டவட்ட மறுப்பு
ஈரானுக்கு அதிநவீன போா்க்கப்பல் எதிா்ப்பு ஏவுகணைகளை விற்பனை செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை சீனா திட்டவட்டமாக மறுப்பு
ஈரானுக்கு ‘சிஎம்-302’ ரகத்தைச் சோ்ந்த, ஒலியை விட வேகமாகச் செல்லக்கூடிய அதிநவீன போா்க்கப்பல் எதிா்ப்பு ஏவுகணைகளை விற்பனை செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடங்குவதற்கு முன்பே ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், பெய்ஜிங்கில் செய்தியாளா்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் மாவோ நிங் அளித்த விளக்கம்: இது திட்டமிட்ட பரப்பப்படும் அவதூறு; ஆதாரமற்ற தவறான தகவல். சா்வதேச அளவில் பொறுப்புள்ள ஒரு பெரிய நாடாக, சீனா எப்போதும் தனது சா்வதேச கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்றி வருகிறது.
மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் பதற்றமான சூழலைத் தணிப்பதற்கு பதிலாக, இத்தகைய பொய்யான செய்திகள் நிலைமையை இன்னும் மோசமாக்கும் என்று கவலை தெரிவித்தாா்.