சீன அதிபர் ஷி ஜிங்பிங்கை கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று (ஜன. 16) நேரில் சந்தித்து உரையாடியுள்ளர்.
கனடா நாட்டின் பிரதமர் மார்க் கார்னி சீனாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தில், தலைநகர் பெய்ஜிங்கில் சீன அதிபர் மார்க் கார்னியை அவர் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
கடந்த 8 ஆண்டுகளில், கனடா பிரதமர் ஒருவர் முதல்முறையாக சீனாவுக்குச் சென்றுள்ள நிலையில், விவசாயம், எரிசக்தி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவது குறித்த முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.
சீனா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தக ரீதியாகத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் சூழலில் இருநாட்டு தலைவர்களும் சந்தித்துள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்காவைச் சாராத பொருளாதாரத்தை உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டு வருவதாகக் கூறிய கனடா பிரதமர் கார்னி இந்தப் பயணத்தில், முன்னணி சீன நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஏற்கெனவே, அமெரிக்காவை தொடர்ந்து கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்கள் மீது 100 சதவிகிதம் வரி விதித்திருந்தார்.
ஆனால், இந்தச் சந்திப்பில் இருநாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர வர்த்தக வரிகள் குறித்த எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.
முன்னதாக, தென் கொரியாவில் கடந்த 2025 அக்டோபரில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டின் இடையே சீனா மற்றும் கனடா நாட்டின் தலைவர்கள் ஆரம்பக் கட்ட சந்திப்பை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.