இந்தியா

பாஜக பதவி விலக வேண்டும்! : மம்தா பானர்ஜி

DIN

அலிப்பூர்துவார்: பாஜக தலைமையிலான அரசு மேற்கு வங்கத்திற்கு வழங்கப்பட வேண்டிய ரூ.1.15 லட்சம் கோடியை உடனே வழங்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். 

மேற்கு வங்கம் அலிப்பூர்துவார் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அரசு நிலுவைத் தொகையை சரியாக அளித்திருந்தால், மாநிலத்தின் பல சமூக நலத்திட்டங்கள் மக்களைச் சேர்த்திருக்க முடியும் எனக் கூறினார். 

பாஜக சத்தியத்தை நிறைவேற்றும் கட்சியல்ல எனக் கூறியவர், அனைத்துத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் நிலப்பட்டாக்கள் வழங்கவும், ஒவ்வொருவருக்கும் ரூ.1.2 லட்சம் வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார். 

மேலும், பழங்குடியினருக்கு உரிய சான்றிதழ்கள் வழங்கவும், சுத்தமான குடிநீர் மற்றும் சமூக நலத்திட்டங்கள் அவர்களை சென்றடைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் மம்தா பானர்ஜி உறுதியளித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

16-ம் நூற்றாண்டு பெண்ணா? ஹரிஜா!

விமானம் மோதி கொத்து கொத்தாக இறந்து விழுந்த பறவைகள்!

காஞ்சிப் பட்டு, கல் ஜிமிக்கி.. அபர்ணா பாலமுரளி!

மோடி 3.O: 4 பெரிய மாற்றங்கள் ஏற்படும் - பிரஷாந்த் கிஷோர் கணிப்பு!

தாய்லாந்தில் மடோனா!

SCROLL FOR NEXT