முகப்பு
X
இந்தியா

நாய்க் குட்டியை கொடூரமாகக் கொல்லும் காணொலி, முதல்வர் கண்டனம்!

மத்திய பிரதேசத்தில் நாய்க் குட்டி ஒன்று கொடூரமாகக் கொலை செய்யப்படும் காணொலி பரவிவரும் நிலையில், அம்மாநில முதலமைச்சர் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:24 PM
X
பகிர்:

மத்திய பிரதேசம் குணா மாவட்டத்தில் நாய்க் குட்டி ஒன்றினை ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யும் காணொலி வலைதளத்தில் பரவியது. இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான், விரைவில் குற்றவாளியின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

கடந்த சனிக்கிழமை சுபாஷ் காலனியைச் சேர்ந்த நபர் நாய்க் குட்டி ஒன்றினை தூக்கி வீசியும், ஓங்கி மிதித்தும் கொலை செய்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவின.  

இதுகுறித்து முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து ஞாயிறு அன்று குற்றவாளி கைது செய்யப்பட்டதாக குணா மாவட்டக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

மேலும், குற்றவாளியின் மனநலம் குறித்து ஆய்வு செய்து வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 
முழு கட்டுரையைப் படிக்க →