தில்லியில் உள்ள அரசுப் பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் குறைந்துள்ளதாக முதல்வர் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின் அரங்கத்தைத் திறந்துவைத்து பேசிய அவர்,
இந்தியா சுதந்திரம் அடைந்து 15-20 ஆண்டுகளில் தனியார்ப் பள்ளிகள் குறைவாக இருந்ததால் பல முக்கிய நபர்கள் அரசுப் பள்ளிகளில் படித்துள்ளனர்.
ஆம் ஆத்மி ஆட்சியில் கல்விக்கு முக்கியத்துவம் அளித்துவருவதாகவும், தில்லியில் உள்ள அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு கடந்த 8 ஆண்டுகளில் பெரிய மாற்றம் கண்டதாகவும் அவர் கூறினார்.
அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு, தனியார் பள்ளிகளை விடக் குறைவாக இல்லை. மாணவர்கள் தன்னம்பிக்கை வளர்ந்துள்ளது. தனியார் பள்ளிகளில் உள்ள சக மாணவர்களை விட அவர்கள் அதிக தன்னம்பிக்கையுடன் இருப்பதைக் காண முடிகிறது.
அரசுப் பள்ளிகளிலிருந்து இடைநிற்றல் விகிதம் அதிகமாக இருந்தது, ஆனால் இந்த பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது. தற்போது கிட்டத்தட்ட 18 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் பயில்கின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.