இந்தியா

ஞானவாபி மசூதி வழக்கு: தொல்லியல் துறைக்கு மேலும் ஒரு வாரம் அவகாசம் வழங்கியது நீதிமன்றம்!

DIN

ஞானவாபி மசூதி வழக்கில் தொல்லியல் துறைக்கு மேலும் ஒரு வாரம் கால அவகாசம் அளித்து வாராணசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஞானவாபி மசூதி தொடர்பான அறிவியல்பூர்வ ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய தொல்லியல் துறைக்கு மேலும் ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி வாராணசி மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தொல்லியல் துறை ஒருவாரம் அவகாசம் கோரியதைத் தொடர்ந்து இந்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த விசாரணையை டிசம்பர் 18-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

முன்னதாக ஆய்வறிக்கையை நவம்பர் 17-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால் தொல்லியல் துறை கூடுதல் அவகாசம் கேட்டதால் நவம்பர் 28-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியது. 

அதன்பின் மீண்டும் பதினைந்து நாட்கள் அவகாசம் கோரியது தொல்லியல் துறை. பத்து நாட்கள் அவகாசம் அளித்து குறிப்பிட்ட நாட்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நவ.30-ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் கூடுதல் அவகாசம் வழங்கி, விசாரணை டிசம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி அமைந்துள்ள ஞானவாபி மசூதியானது, முகலாய அரசா் ஒளரங்கசீப் உத்தரவின்பேரில் ஹிந்து கோயிலின் ஒரு பகுதியை இடித்து கட்டப்பட்டதாக சில ஹிந்து அமைப்புகள் தரப்பில் கூறப்படுகிறது.

அதையடுத்து மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்துமாறு ஜூலை 21-ஆம் தேதி இந்திய தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து ஜூலை 24-ஆம் தேதி இந்திய தொல்லியல் துறை தனது ஆய்வை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

பரோடா வங்கி நிகர லாபம் ரூ.4,886 கோடியாக உயா்வு

மாா்ச்சில் சரிவைக் கண்ட தொழிலக உற்பத்தி

விளையாட்டு விடுதி மாணவா்கள் சோ்க்கைக்கு தோ்வுப் போட்டிகள்

மன நல மையத்தில் சிகிச்சை பெற்றவா் தற்கொலை

SCROLL FOR NEXT